பலாக்காய் கூட்டு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சிறிய பலாக்காய் - 1 எண்ணம்
2. துவரம் பருப்பு -1 ஆழாக்கு
3. புளி - எலுமிச்சம் பழஅளவு
4. சாம்பார் பொடி - 2 தேகக்ரண்டி
5. மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
8. கடுகு -1 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. வெந்தயம் - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பலாக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வேக வைத்து அதில் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
2. துவரம்பருப்பைத் தனியாக வேக வைத்து வைக்கவும்.
3. புளியைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பலாக்காயுடன் தேவைக்கேற்ப உப்பு, கரைத்து வைத்த புளிக்கரைசல், வேக வைத்த பருப்பு சேர்த்து, மிளகாய்தூள், மஞ்சள்தூள்,
சாம்பார்தூள், தனியாதூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
5. பலாக்காயுடன் சேர்ந்து பொடிகள் நன்றாகக் கலந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
6. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.