கூட்டுக்காய் பிரட்டல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காய் வகை- 500 கிராம் (காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட்)
2. வெங்காயம் -1எண்ணம்
3. தக்காளி -1 எண்ணம்
4. இஞ்சிபூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. மசாலாத்தூள் -1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
7. உப்பு -1 தேக்கரண்டி
தாளிக்க:
8. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
9. சோம்பு -1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
3. வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. வெட்டிய உருளைக்கிழங்கு, பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
5. பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
7. அதன் பின்னர் 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பூப்போன்று வேகவிடவும்.
குறிப்பு:
தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேசைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்துச் சுருளவிடலாம், இது சுவையைக் கூட்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.