பிரண்டை - சுண்டைக்காய் பச்சடி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டை - சிறிதளவு
2. சுண்டைக்காய் - சிறிதளவு
3. தக்காளி 1 எண்ணம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
8. துவரம் பருப்பு (வேக வைத்தது) - 1 கப்
9. மஞ்சள் தூள் - சிறிதளவு
10. மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
11. மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
12. புளிக்கரைசல் - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
14. எண்ணெய் - தேவையான அளவு
15. கடுகு - 1/4 தேக்கரண்டி
16. உளுந்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
17. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
18. பெருங்காயம் - 1 சிட்டிகை
19. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்த உடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
2. நரம்பு நீக்கி சிறியதாக நறுக்கிய பிரண்டையை சேர்த்து வதக்கவும்
3. பிறகு சிறியதாக நறுக்கிய சுண்டைக்காயையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி மசியவும். மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறிய பின் புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்
6. வெந்ததும் வேக வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும், கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு: இந்தப் பச்சடி பெண்களின் இடுப்பு வலிக்குச் சிறந்த உணவாகும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.