சிறுகிழங்கு பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிறுகிழங்கு - 200 கிராம்
2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
3. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
6. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. முதலில் சிறுகிழங்கைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நான்கு அல்லது ஐந்து முறை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2. குக்கரில் கழுவிய சிறு கிழங்கு மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
3. நீராவி அடங்கியதும் சிறு கிழங்குகளை எடுத்துச் சிறிது நேரம் ஆற விடவும்.
4. நன்றாக ஆறிய பின் கிழங்குகளைத் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
5. வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு போட்டு தாளிக்கவும்.
7. கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள சிறுகிழங்கு துண்டு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.