புடலங்காய் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 1 எண்ணம்
2. கடலைப்பருப்பு - 25 கிராம்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. கறிவேப்பிலை - 1 கொத்து
6. தேங்காய்துருவல் - 2 தேக்கரண்டி
7. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
9. கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
10. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. புடலங்காயையும், வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
3. தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
5. பிறகு அதில் வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு சிவக்க வதக்கவும்.
6. வதக்கியதும் நறுக்கிய புடலங்காயையும், வேகவைத்த கடலைப்பருப்பையும் போட்டு இலேசாகக் கிளறி விடவும்.
7. அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு ஆகியவை சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக வைத்து, கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.