சுண்டைக்காய் பக்கோடா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை சுண்டைக்காய் - 1/2 கப்
2. கடலைமாவு - 1 கப்
3. அரிசிமாவு - 3 மேசைக்கரண்டி
4. மல்லித்தழை - சிறிது
5. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
6. எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. சுண்டைக்காயின் காம்புகளை நீக்கி லேசாக தட்டி விதையை நீக்கி விட்டு தண்ணீரில் போடவும். ஐந்து நிமிடம் கழித்துத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
2. அகலமான பாத்திரத்தில் சுண்டக்காயுடன் கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய மல்லித்தழை, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
3. இதை நன்றாகக் காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
1. இந்தப் பக்கோடாவில் கசப்பு இருக்காது.
2. மோர்க் குழம்பில் போட்டும் சாப்பிடலாம்.
3. தயிர் சாதம், ரசச் சாதத்துடன் வைத்துச் சாப்பிட நன்றாக இருக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.