நெல்லை அவியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 1/2 கிலோ
2. வாழைக்காய் - 2 எண்னம்
3. சேனைகிழங்கு- 100கிராம்
4. புடலங்காய - 1 எண்ணம்
5. வெள்ளரிக்காய்-1 எண்ணம்
6. கேரட்-1 எண்ணம்
7. வெள்ளைப்பூசனி -50கிராம்
8. மாங்காய் - சிறியது
9. முருங்கைக்காய்- 3 எண்ணம்
10. சீனி அவரைக்காய்- 10 எண்ணம்
11. சின்ன வெங்காயம் -5 எண்ணம்
12. பச்சைமிளகாய்-6 எண்ணம்
13. சீரகம்-1 கரண்டி
14. மஞ்சள்தூள் - 1 கரண்டி
15. தேங்காய் -1மூடி
16. தேங்காய் எண்ணெய்- 1 கரண்டி
17. கருவேப்பிலை - சிறிது
18. தயிர் - 3 கரண்டி
செய்முறை:
1. காய்கள் அனைத்தையும் மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. தேங்காயைத் துருவி தண்ணீர் ஊற்றாமல் சிறிது அரைக்கவும்.
3. பச்சை மிளகாய்,சீரகம்,மஞ்சள்தூள்,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காய்கள், அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து,நன்கு வேக வைக்கவும்.
5. காய்கள் வெந்தவுடன் தேங்காய் சேர்த்துக் கிளரி இறக்கி வைத்துத் தயிர்,தேங்காய்,எண்ணெய்,கருவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.