முட்டைக்கோஸ் மஞ்சூரியன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
மசாலா கலவைக்கு
1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. கரம் மசாலாதூள் - 1/4 மேசைக்கரண்டி
4. இஞ்சி பூண்டு விழுது - சிறிது
5. கார்ன்ஃபிளவர் - 25 கிராம்
6. மைதா மாவு - 50 கிராம்
7. உப்பு – தேவையான அளவு
வதக்க
8. பூண்டு – 1 எண்ணம்
9. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
10. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
11. தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
12. ரெட் சில்லி – 1 தேக்கரண்டி
13. சோயா சாஸ் – சிறிது
14. மிளகுத்தூள் – சிறிது
செய்முறை:
1. முட்டைகோஸை நன்றாகக் கழுவித் துருவிக் கொள்ளவும்.
2. பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசாலாப் பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாகப் பிசறவும் தண்ணீர் தேவை என்றால் மட்டும் சேர்க்கவும்.
3. ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதைச் சிறு உருண்டையாகப் பிடித்துப் பொரித்தெடுக்கவும்.
4. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
5. பின்னர் அதில் தக்காளி சாஸ், ரெட் சில்லி, சோயா சாஸ் கலந்து, மிளகுத்தூள் சிறிது போட்டு வதக்கவும்.
6. அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது, சிறிது கார்ன்ஃபிளவர் மாவைத் தண்ணீரில் கலக்கி ஊற்றிக் கொதிக்க விடவும்.
7. பின்னர் அதில் பொரித்த முட்டைக்கோஸ் மசாலா உருண்டையைப் போட்டுச் சிறிது கெட்டியானதும் இறக்கிப் பரிமாறலாம்.
குறிப்பு:
மல்லித்தழை, வட்டமாக வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை தூவி அலங்கரித்தும் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.