கத்திரிக்காய் மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 250 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. பட்டை - சிறிய துண்டு
8. பிரியாணி இலை - 1 எண்ணம்
9. சோம்பு - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, சோம்பு, பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும்.
4. பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலா வாசனை போக வதக்கவும்.
7. அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
8. காய் வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். நீர் சுண்டியதும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.