புடலங்காய் பால் கூட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. குட்டைப் புடலை (நறுக்கியது) – 1 கப்
2. தேங்காய்ப்பால் – 2 கப்
3. சர்க்கரை – 1 தேக்கரண்டி
4. உப்பு – 1 சிட்டிகை.
தாளிக்க
5. தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
6. காய்ந்த மிளகாய் – 1 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
1. நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு, அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும்.
2. தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.
3. பிறகு, அதனுடன் சர்க்கரை சேர்த்துப் பரிமாறலாம்.
குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால், விரைவில் சாப்பிட்டுவிட வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.