வெண்டைக்காய் ப்ரை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 1/4 கிலோ
2. கடலை மாவு - 6 டீஸ்பூன்
3. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
4. மைதா மாவு - 2 தேக்கரண்டி
5. சோள மாவு - 1 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
7. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெண்டைக்காயை நடுத்தரமான அளவில் நறுக்கவும்.
2. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுடன் வெண்டைக்காயைச் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்க்கவும்.
3. எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது சூடான எண்ணெயை எடுத்து வெண்டைக்காய் கலவையில் விட்டு நன்கு கலக்கவும்.
4. பின்னர், அந்தக் கலவையை காயும் எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.