புடலங்காய் வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 500 கிராம்
2. கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
3. சோள மாவு - 2 மேசைக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. புடலங்காயின் தோலைச் சீவி, அதன் உள்ளே இருக்கும் வெள்ளையான பகுதியை எடுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
2. அதன் மேல் கடலை மாவு, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாகக் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிதமான சூட்டில் வெட்டி வைத்துள்ள புடலங்காய் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும்.
4. அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து, அதனை வறுத்து வைத்துள்ள புடலங்காயின் மேல் தூவி விட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.