பலாக்கொட்டை பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பலாக்கொட்டை - 20 எண்ணம்
2. வேகவைத்த கடலைப்பருப்பு - 1 கரண்டி
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. தேங்காய்த் துருவல் - 2 கரண்டி
6. கடுகு, உளுந்து - 1 கரண்டி
7. எண்ணெய் - 2 கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிதளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.பலாக்கொட்டையை வேகவைத்து, தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
3. பலாக்கொட்டை, கடலைப் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகப் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.