வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 100 கிராம்
2. காரட் (துருவியது) - 1 மேஜைக்கரண்டி
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. கறிவேப்பிலை - 1 கொத்து
5. கெட்டித் தயிர் - 2 மேஜைக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. கடுகு - 1/4 தேக்கரண்டி
9. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. வெள்ளரிக்காயைக் கழுவி தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும்.
2. காரட்டையும் கழுவித் துருவிக்கொள்ளவும்.
3. துருவிய வெள்ளரிக்காய், காரட் இரண்டையும் உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
5. அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
6. தாளிசக் கலவையினை தயிருடன் சேர்த்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.