கருணைக்கிழங்கு மசியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
2. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
3. புளி - 1 மேஜைக்கரண்டி
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
8. பூண்டு - 3 பல்
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை-1 கொத்து
தாளிக்க:
11. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
12. சோம்பு - 1/2 தேக்கரண்டி
13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. கருணைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பூண்டைத் தட்டி வைக்கவும்.
4. தோல் உரித்த கிழங்கை கையால் மசித்து, உப்பு, புளிச்சாறு, மிளகாய்ப்போடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
5. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
6. கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
7. மஞ்சள் தூள், கலந்த கிழங்கு கலவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வேகவிடவும் .
8. மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.