காலிஃபிளவர் மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிஃபிளவர் - 1 நடுத்தர அளவு
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
அரைக்க:
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. மிளகு - 3/4 தேக்கரண்டி
9. மல்லி (தனியா) - 1 தேக்கரண்டி
10. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. பூண்டு - 2 பல்
தாளிக்க:
12. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. இலவங்கப்பட்டை - 1/2 அங்குலத் துண்டு
15. கிராம்பு - 2 எண்ணம்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி
17. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காலிஃபிளவரை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு மற்றும் 1/8 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து, கொதிக்க வைத்த நீரில் மூழ்க வைக்கவும்.
2. அரைக்கக் கொடுத்துள்ளவற்றை முதலில் தண்ணீரில்லாமல் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு, மீண்டும் அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மேலேக் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசைப்படி சேர்த்துத் தாளிக்கவும்.
4. பின்னர் அதில் மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவையான உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
6. காலிஃபிளவரைத் தண்ணீரில் இருந்து வடிகட்டி அதில் சேர்க்கவும்.
7. அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்க்கவும்.
8. தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். காலிஃபிளவர் வேக நேரமாகுமெனில் மூடி போட்டு வேக வைக்கலாம்.
9. எண்ணெய் பிரிய ஆரம்பித்து, கறி பளபளப்பாகும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து, காலிஃபிளவர் வதங்கி லேசாக சுருங்கவும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.