உருளைக்கிழங்கு மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 4 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. மல்லித்தழை - சிறிது
தாளிக்க:
7. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
8. சோம்பு - 1 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துச் சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் தோலுரித்து மசித்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சோம்பு போடவும். சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பைக் குறைந்த நெருப்பில் வைத்துச் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
5. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும்.
6. மசாலா வாடை போனதும் மசித்து வைத்துள்ள கிழங்குகளைச் சேர்க்கவும்.
7. மசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.