காளான் வறுவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 100 கிராம்
2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
4. வெங்காயம் - 1/2 எண்ணம்
5. பூண்டு - 2 பல்
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காளானை மூன்று துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
4. காளானில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஒரு சிட்டிகை சர்க்கரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
6. பின்னர், அதனுடன் காளான் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு வைக்கவும்.
7. பின்னர் கிளறி விட்டு, அந்த தண்ணீரை வற்ற வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.