காளான் மிளகு மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. பூண்டு - 4 பல்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. குடை மிளகாய் - 1/2 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
6. கறிவேப்பிலை - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
2. மல்லித்தழை, பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. மிளகாய் வற்றலை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பூண்டைப் போட்டுத் தாளித்த பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம் முக்கால் பாகம் வதங்கிய பின்புய், அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. அதன் பிறகு, அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும்.
7. தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. அதிலேயேத் தண்ணீர் இருக்கும்.
8. காளான் வெந்தவுடன் அதில் மிளகுத்தூள், கொரகொரப்பாக பொடித்த மிளகாய் வற்றல் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
9. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.