வாழைப்பூ பச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு – 1/2 கோப்பை
2. வாழைப்பூ இதழ்கள் – 20 எண்ணம்
3. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
4. தக்காளி – 3 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
7. புளி – சிறு நெல்லிக்காய் அளவு
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
10. கடுகு – 1/2 தேக்கரண்டி
11. உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
12. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
2. வாழைப்பூவை நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு வைக்கவும் (கறுத்துப் போகாமல் இருக்கும்).
3. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் நன்கு வதங்கியதும், வாழைப்பூ இதழ்களைச் சேர்த்து வதக்கவும்.
8. வாழைப்பூ வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
9. பிறகு, வேக வைத்த துவரம்பருப்பையும் மிளகாய்த் தூளையும் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
10. புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும்.
11. பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.