பீட்ரூட் இனிப்பு பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் – 1/4 கிலோ
2. சர்க்கரை – தேவையான அளவு
3. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
4. திராட்சை – 12 எண்ணம்
5. ஏலக்காய்தூள் – 1/2 தேக்கரண்டி
6. கார்ன்பிளவர் – 1 தேவையான அளவு
7. நெய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய வைத்து, முந்திரிப்பருப்பு, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
3. மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலைச் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.
4. வதக்கிய பின், இறக்கி ஆறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
5. அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்துக் குறைந்த நெருப்பில் கொதிக்க விடவும்.
6. அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேர்க்கவும்.
7. நன்கு கொதித்ததும் கார்ன்பிளவரை அரை கோப்பைத் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.
8. ஐந்து நிமிடம் கொதித்ததும், ஏலத்தூள் சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.