கொண்டைக் கடலை புளிக் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக் கடலை – 150 கிராம்
2. கெட்டியான புளிக் கரைசல் – 2 மேசைக்கரண்டி
3. சாம்பார் பொடி – 1 மேசைக்கரண்டி
4. கடலை மாவு – 1 தேக்கரண்டி
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. கொண்டைக் கடலையை முந்தைய நாளே ஊற வைத்து விடலாம்.
2. கொண்டைக்கடலையைக் குக்கரில் வேக வைக்கவும்.
3. கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
4. இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துப் புளிக்கரைசலில் கொட்டவும்.
5. வேக வைத்தக் கொண்டைக் கடலையை கொட்டவும்.
6. பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.