கோவைக்காய் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோவைக்காய் (நறுக்கியது) - 2 கோப்பை
2. உப்பு - தேவையான அளவு
வறுத்துத் திரிக்க:
3. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
4. மல்லி - 1/2 தேக்கரண்டி
5. வெந்தயம் - சிறிதளவு
6. மிளகாய்வற்றல் - 2 தேக்கரண்டி
7. தோல் நீக்கிய நிலக்கடலை- 1 தேக்கரண்டி
தாளிக்க:
8. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
11. வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
12. மிளகாய்வற்றல் - 1 எண்ணம்
13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
14. பெருங்காயம் - சிறிது
15. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வறுத்துத் திரிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை வறுத்து ஆறவைத்துப் பின்னர் திரித்து வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிசப் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் நறுக்கிய கோவைக்காயைச் சேர்த்து, சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும்.
4. காய் வெந்ததும், திரித்தத் தூளைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.