மாதுளம்பழப் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாதுளம் பழம் - 1 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. தயிர் - 1 1/2 கப்
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.
3. மாதுளம் பழ விதைகளை உதிர்த்து வைக்கவும்.
4. வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
5. தயிரைக் கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலந்து, அதில் மேலிருக்கும் அனைத்துக் கலவைகளையும் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.