மாங்காய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 250 கிராம்
2. வெல்லம் - 100 கிராம்
3. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. கருவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மாங்காயைச் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெல்லத்தைச் சுடுநீரில் கரைத்துத் தூசியின்றி வடிகட்டிக் கொள்ளவும்.
3. அடி கனமான பாத்திரத்தில், 2 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கி விட்டு பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
5. வெல்லக் கரைசலை அதில் ஊற்றி, சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.