கோஸ் பச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 250 கிராம்
2. மிளகாய் - 3 எண்ணம்
3. வெங்காயம் - சிறிது
4. உப்பு - தேவையான அளவு
5. மல்லித்தழை - தேவையான அளவு
6. கடுகு உளுந்து - தேவையான அளவு
7. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1.முட்டைக்கோஸை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெங்காயம் போட்டு வதக்கி பின் அதில் நறுக்கி வைத்த கோஸைச் சேர்த்து கிளறவும்.
3. உப்பு, மிளகாய், மல்லித்தழை நறுக்கிப் பொட்டு இறக்கவும்.
குறிப்பு: துருவிய காரட் சேர்த்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.