மாங்காய் பச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கிளி மூக்கு மாங்காய் - 1 எண்ணம்
2. தேங்காய்த் துண்டுகள் - 1/4 கோப்பை
3. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
4. சீரகம் - 1 கரண்டி
5. கடுகு - 1 கரண்டி
6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
7. பூண்டு - 4 பற்கள்
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கல் உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. மாங்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாங்காய், பச்சை மிளகாய், பூண்டைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து தேங்காய், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
4. வதக்கியதை ஆறவைத்து, பின்னர் அதனை நன்கு அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6. அரைத்து வைத்திருப்பதில் தாளிசத்தைச் சேர்த்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.