காலிபிளவர் 65
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலி பிளவர் - 1 எண்ணம்
2. அரிசி மாவு - 1/4 கோப்பை
3. சோள மாவு - 2 மேசைக்கரண்டி
4. மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
5. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. கரம் மசாலாத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காலி பிளவரைப் பிரித்து எடுத்து சூடான தண்ணீரில் போட்டு,சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து எடுக்கவும்.
2. ஒரு வாயகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவைச் சேர்த்து அத்துடன் மிளகாய்த் தூள்,கரம் மசாலாத்தூள், காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3. கலக்கப்பட்ட கலவையுடன், காலி பிளவரை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மசாலா பொருட்கள் சேர்த்துப் பிரட்டி வைத்துள்ள காலி பிளவரைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
5. பொரித்த காலி பிளவரை எடுத்து எண்ணெய் வடியும் துளை கொண்ட தட்டில் போட்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
6. அதே எண்ணெய்யில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து அத்துடன் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து கலந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.