பலாக்காய் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பலாக்காய் துண்டுகள் - 300 கிராம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. பச்சைமிளகாய் - 5 எண்ணம்
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. தோல் உரிக்கப்பட்ட பலாக்காய்த் துண்டுகளை குக்கரில் போட்டு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்.
2. குக்கரில் தண்ணீரை வடிகட்டி ஆற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் சேர்த்து வெடித்ததும், கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.
4. அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
5. பின் வேக வைத்த பலாக்காயைச் சேர்த்துக் கிளறி சிறிய நெருப்பில் மூடி வைக்கவும்.
6. ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.