வெங்காயத்தாள் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெங்காயத்தாள் - 1/2 கப்
2. தயிர் - 1 கப்
3. இஞ்சி - சிறிது
4. சாலட் கீரை - 1 கொத்து
5. தக்காளி சாஸ் - 1/2 கப்
6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தாள், சாலட் கீரை, பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கழுவிப் பொடியாக நறுக்கவும்.
2. இஞ்சியைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
3. தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், வெங்காயத்தாள், சாலட் கீரை, பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.