வெண்டைக்காய் தக்காளி பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 250 கிராம்
2. தக்காளி - 100 கிராம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. புளி - சின்ன எலுமிச்சை அளவு
6. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
9. கடுகு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
2. தேங்காயைச் சிறிது தண்ணி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. புளியைச் சிறிது நீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், அதில் சீரகம், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்றாக வதங்கியது, நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. வெண்டைக்காயின் வழுவழு ப்பு போய் காய் நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீர், மிளகாய்த்தூள் சேர்த்து மூடியிட்டுக் கொதிக்க விடவும்,
8. அனைத்தும் நன்கு கொதித்து கலந்து சேர்ந்து வரும் பொழுது, அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்துச் சூடானதும், மல்லித்தழையினைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.