காளான் சில்லி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. கடலை மாவு - 4 மேசைக்கரண்டி
3. கார்ன் பிளவர் - 2 மேசைக்கரண்டி
4. மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
5. சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
6. சோம்புத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
7. மிளகுத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
8. கரம்மசாலாத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
9. எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. காளானைச் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்பிளவர், கடலை மாவு, உப்பு, சீரகம், சோம்புத் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
3. அதில் நறுக்கிய காளானைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. மாவு கலந்த காளானை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.