அவரைக்காய் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 250 கிராம்
2. சிறிய வெங்காயம் - 3 எண்ணம்
3. மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி
4. சாம்பார் தூள் -1 தேக்கரண்டி
5. கடுகு - சிறிது
6. உளுந்தம் பருப்பு - சிறிது
7. சீரகம் – சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அவரைக்காய், வெங்காயம் ஆகியவற்றைத் தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. கனமான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அது சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டு பொரிந்தவுடன், நறுக்கி வைத்திருக்கும் சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
3. அதன் பிறகு, அதில் நறுக்கி வைத்திருக்கும் அவரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் மிளகாய்த்தூள், சாம்பார்தூள் , உப்பு சேர்த்து வதக்கி, 200 மிலி அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேகவைக்கவும்.
5. தண்ணீர் சுண்டியதும் நன்றாக கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.