கோவைக்காய் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோவைக்காய் - 1/4 கிலோ
2. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
4. சீரகக்தூள் - 1 தேக்கரண்டி
5. தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
2. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசிறி வைத்த கோவைக்காயைப் போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து வேகவைக்கவும்.
4. காய் வெந்தபின்பு இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.