தக்காளி பச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 250 கிராம்
2. வெங்காயம் - 200 கிராம்
3. மிளகாய்த் தூள் - 25 கிராம்
4. எண்ணெய் - 30 மி.லி
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. உளுந்து - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.தக்காளியை சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் தனித்தனியே நறுக்கி வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து ஆகியவற்றுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. இந்த வதக்கலில் மிளகாய்த்தூள், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
4. நன்கு வதங்கிய பின்பு அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.
5. நன்றாகக் கொதித்துக் கெட்டியாக வரும் போது இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.