வாழைக்காய் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் - 1 எண்ணம்
2. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாழைக்காயின் தோலைச் சீவி நறுக்கித் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகளுடன் உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசறி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பிசறி வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கிளறி விடவும்.
4. வாழைக்காய்த் துண்டுகளைத் தனித்தனியாகப் பரப்பி விட்டு, மூடி போட்டு மிதமான நெருப்பில் வேக விடவும்.
5. இடையிடையே வாழைக்காய்த் துண்டுகளைத் திருப்பி விட்டு வேக விடவும்.
6. காய் நன்றாக வெந்ததும், பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.