சிறுகிழங்குப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சிறுகிழங்கு 250 கிராம்
2. எண்ணெய் 1 மேசைக்கரண்டி
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பூண்டு - 1 பல்
5. தேங்காய் 2 மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய்- 2 எண்ணம்
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. முதலில் சிறு கிழங்கை தண்ணீரில் போட்டு தோல் நீக்கிச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பின்பு தண்ணீரில் சிறுகிழங்கு, உப்பு போட்டு வேகவைத்துத் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. நறுக்கிய வெங்காயம், தேங்காய், பூண்டு, சீரகம் , மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
4. ஒரு கடையில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு , உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும்.
5. பின்பு வெந்த சிறுகிழங்கைச் சேர்த்துப் பிரட்ட வேண்டும்.
6. கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்த்து கிளறி மிதமான நெருப்பில் சிறிது நேரம் வைத்து இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.