முட்டைக்கோஸ் மோர்க்கூட்டு
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 250 கிராம்
2. புளித்த மோர் - 250 மில்லி கிராம்
3. உப்பு - தேவையான அளவு
4. மஞ்சள் பொடி - கால் மேசைக்கரண்டி
5. அரிசிமாவு - ஒரு சிறிய தேக்கரண்டி
அரைக்க வேண்டிய பொருட்கள்:
1.தேங்காய் - அரை மூடி
2. பச்சைமிளகாய் - 5 எண்ணம்
3. வரமிளகாய் - 2 எண்ணம்
4. சீரகம் - கால் தேக்கரண்டி.
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
1.கடுகு - ஒரு சிறிய மேசைக்கரண்டி
2. கறிவேப்பிலை - 10 இலைகள்
3. தேங்காய் எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
1.முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. நன்கு கோஸ் வெந்தவுடன் அரைத்ததை போட்டு, பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் மோரை அதனுடன் சேர்த்து, சிறிது தண்ணீரில் அரிசி மாவைக் கரைத்து அதனுடன் சேர்க்கவும்.
4. இறக்கி வைத்தவுடன் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.