சீனி அவரைக்காய்ப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சீனி அவரைக்காய் (கொத்தவரங்காய்) - 1/4 கிலோ
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
4. கடுகு உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. சீனி அவரைக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி லேசாக வதக்கி வைக்கவும்.
3. வதங்கிய சீனி அவரைக்காயை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துத் தண்ணிரை வடித்தெடுக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு,உளுந்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த காயைச் சேர்த்து வதக்கவும்.
5. காய் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிரட்டி, புளிக் கரைசல் சிறிது கலந்து வேகது விடவும்.
6. காய் நன்கு வதங்கியதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.