மிளகுக் காளான்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காளான்கள் - 12 எண்ணங்கள் (நறுக்கியது)
2. குடை மிளகாய் - 3 எண்ணங்கள்
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணங்கள்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. எண்ணெய் - 1/4 கிண்ணம்
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
9. மிளகு - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் குடை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிளகைப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
4. அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பச்சை வாசனை போகவும், நறுக்கி வைத்த காளான் மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும்.
6. கலவை நன்கு வதங்கிய பின், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்க்கவும்.
7. பின்னர் அதில் சிறிது தண்ணீரைத் தெளித்து, பாத்திரத்தை மூடிவிட்டு சில நிமிடங்கள் மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
8. தண்ணீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும்.
9. இதனுடன் பொடித்து வைத்திருக்கும் மிளகுத் தூளைச் சேர்த்து, சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை ஊற்றி மிதமான நெருப்பில் நன்கு வறுக்கவும்.
10. பொன் நிறமாக வறுபட்டவுடன் இறக்கி வைத்து மேலாகக் மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.