வெண்டைக்காய் பச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 250 கிராம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. புளி-சிறிதளவு
4. தேங்காய்த் துருவல்-2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
6. சீரகம்- 1தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கடுகு- தேவையானஅளவு.
செய்முறை:
1. வெண்டைக்காயை வட்டமாகவும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கவும்.
2. தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், சீரகம் மூன்றையும் அரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெண்டைக்காயைப் போட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
4. பின்னர் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களைக் கலந்து, அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.