கத்திரிக்காய் வதக்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 6 எண்ணம்
2. வெங்காயம்-1எண்ணம்
3. தக்காளி-1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
6. கரம்மசாலா-1 /2 தேக்கரண்டி
7. பூண்டு - 2 பல்
8. சோம்பு-1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - 3 தேக்கரண்டி
11. கருவேப்பிலை - சிறிது
12. கொத்தமல்லி இலை - சிறிது.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கருவேப்பிலை,சோம்பு தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. பின் நீளவாக்கில் வெட்டிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், கரம்மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறி மூடி வைக்கவும்.
4. நன்கு வெந்து எண்ணெய் பிரியும் வரை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.