வெண்டைக்காய் அவியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. மிளகாய் – 6 எண்ணம்
5. சீரகம் – 1தேக்கரண்டி
6. பச்சரிசி – 1தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – 1கொத்து
9. மல்லித்தழை – தேவையான அளவு
10. தேங்காய் துருவல் – 1 கப்
11. உப்பு – தேவையான அளவு
12. நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து வெட்டி, பிசுபிசுப்புத் தன்மை குறைய வெயிலில் சிறிது நேரம் காய விடவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாய் போன்றவற்றை நறுக்கி வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம், அரிசி ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
5. நன்கு வதக்கியவுடன் நறுக்கி வைத்த வெண்டைக்காயைச் சேர்த்து, பிசுபிசுப்புத் தன்மை மாறி நன்கு உதிரியாகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர், அரைத்த விழுது, தேவையான உப்பையும் அதில் சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
7. மேலாக மல்லித்தழையைத் தூவவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.