கத்திரிக்காய்ப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 5 சிறியது
2. பூண்டு - 10 பற்கள்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை- சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி வைக்கவும்.
2. பூண்டு, வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.
4. அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
5. அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து மிதமான நெருப்பில் கத்தரிக்காயை வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.