கத்திரிக்காய்த் தொக்கு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் – 1/4 கிலோ
2. சின்னவெங்காயம் – 1 கோப்பை
3. தக்காளி – 2 எண்ணம்
4. இஞ்சிப்பூண்டு விழுது – 1தேக்கரண்டி
5. சோம்பு – 1/2 தேக்கரண்டி
6. கறிமசாலாத்தூள் – 1தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 1தேக்கரண்டி
8. சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – சிறிது
11. உப்பு – தேவையான அளவு
12. மல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு
13. நல்லெண்ணெய் – தேவையான அளவு
14. தேங்காய்ப்பால் – 1/2 கோப்பை.
செய்முறை:
1. கத்தரிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கியபின்பு இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
4. பச்சை வாசனை போன பின்பு தக்காளியைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
5. பின்பு அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, கறிமசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. நன்றாக வதக்கிய பின்பு கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறவும்.
7. தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடபும்.
8. கடைசியாகத் தேங்காய் பாலைச் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.