மசாலா உருளைக்கிழங்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு-250 கிராம்
2. மிளகாய் வற்றல்- 10 கிராம்
3. தனியா- 2 தேக்கரண்டி
4. முந்திரிப் பருப்பு- 10 கிராம்
5. தேங்காய் - பால் எடுக்க தேவையான அளவு
6. கடுகு, உளுந்து, வெங்காயம்- தாளிக்கத் தேவையான அளவு
7. கருவேப்பிலை, மல்லித்தழை- தேவையான அளவு
8. உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு
செய்முறை:
1.உருளைக்கிழங்கை அதிகம் குழைந்து விடாமல் வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. மிளகாய் வற்றல், தனியா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
3. தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். பின் அந்த தேங்காய்ப் பாலில் அந்த விழுதைக் கலந்து வைக்கவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
5. அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு சிவக்க வதக்கவும்.
6. தேங்காய்ப்பாலில் கலந்த விழுதை அதில் ஊற்றி தேவையான உப்பு, மஞ்சள்தூள் கலந்து மசால் வாசனை போகுமளவிற்கு கொதிக்க வைக்கவும்.
7. அதன் பிறகு உருளைக் கிழங்குத் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.