சேப்பங்கிழங்கு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சேப்பங்கிழங்கு - 5 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
3. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
4. சோளமாவு - 2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. சேப்பங்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.
2. வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு சிறிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்துப் பிசறவும்.
4. பின்னர் அதில் சோள மாவைத்தூவி பிரட்டி விடவும்.
5. மேலாகச் சிறிது தண்ணீரைத் தெளித்து நன்றாகப் பிசறி வைத்துக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கிழங்குத் துண்டுகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
7. கடைசியில் சிறிது கறிவேப்பிலையையும் எண்ணெய்யில் பொரித்து, வறுவலின் மேல் தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.