கத்திரிக்காய் வதக்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 6 எண்ணம்
2. புளி - எலுமிச்சையளவு
3. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
5. உப்பு - தேவையான அளவு
6. கரம் மசாலா பவுடர் - 4 தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
7. எள் - 3 தேக்கரண்டி
8. வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
தாளிக்க:
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. எண்ணை - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுத்து வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய்யின்றி, எள்ளைப் போட்டு பொரியும் வரை வறுத்தெடுத்து ஆற விடவும்.
3. ஆறிய எள்ளுடன் வேர்க்கடலையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
4. கத்திரிக்காயைக் கழுவி, காம்பு பகுதியை அப்படியே விட்டு விட்டு, அடி பாகத்தை மட்டும் நான்காகக் கீறிக் கொள்ளவும்.
5. கீறிய முழு கத்திரிக்காயின் உள்ளே ஒரு டீஸ்பூன் கரம்மசாலாத் தூளை வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
7. பின்னர் அதில் கத்திரிக்காயைச் சேர்த்து, இலேசாகப் பிரட்டி விடவும். மூடி போட்டு, மிதமான நெருப்பில் வைத்து வேக விடவும்.
8. கத்திரிக்காய் பாதி வெந்ததும், அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு, புளிச்சாறைச் சேர்க்கவும்.
9. தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் வேக விடவும்.
10. கடைசியில் பொடித்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலைப் பொடியைத் தூவி கிளறி விடவும்.
11. கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும், இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.