வாழைப்பூ பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ - 3 எண்ணம்
2. தேங்காய் - கால் பகுதி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. பூண்டு - 3 பல்
5. வெங்காயம் - 50 கிராம்
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. கருவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.வாழைப்பூவின் மொட்டை மட்டும் பிரித்து நறுக்கிக் கொள்ளவும். (வாழைப்பூ மொட்டு தவிர மற்றவைகளைக் கழித்து விடவும்)
2. இதை நீரில் கழுவி உப்பு சேர்த்து வேக விடவும்.
3. நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின்பு பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
4. தேங்காய், சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து பூவில் பிசைந்து கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டுத் தாளித்து தாளிக்கவும்.
6. இந்த தாளிசத்தில் வேக வைத்த பூவைக் கலந்து தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.