காலிபிளவர் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் – 1 எண்ணம்
2. உப்பு- தேவையான அளவு
3. மஞ்சள் தூள்- சிறிது
4. சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
தாளிக்க
5. நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
6. கடுகு- 1 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
8. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
9. சீரகம்- 1/2 தேக்கரண்டி
10. மிளகாய்வற்றல் - 1 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. காலிபிளவரை பத்து நிமிடங்கள் சுடு நீரில் ஊற வைக்கவும். இப்படிச் செய்வதால் அப்பூவில் இருக்கும் சிறு பூச்சி, புழுக்கள் அழிந்து விடும்.
2. காலிபிளவரை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிசப் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
4. அதில் நறுக்கிய காலிபிளவர், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக விடவும்.
5. காய் வெந்ததும் சாம்பார் தூளைச் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.